×

350 கோடி ‘டோலா 650’ மாத்திரைகள் விற்பனை செய்த விவகாரம் நோயாளிக்கு டோலோ பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு; மைக்ரோ லேப்ஸ் நிறுவன விற்பனை மோசடி அம்பலம்: ரூ.300 கோடி வரி ஏய்ப்பு

சென்னை: மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தங்கள் மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1000 கோடிக்கு பரிசு பொருட்கள் கொடுத்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. பிரபல மருந்து நிறுவனம் ைமக்ரோ லேப்ஸ் சார்பில் காய்ச்சலுக்கு ‘டோலோ 650’ மாத்திரை விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் காய்ச்சலுக்கு பொதுமக்கள் டோலோ 650 மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தினர். அந்த வகையில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தயாரித்த டோலோ 650 மாத்திரை மட்டும் 350 கோடி மாத்திரைகள் விற்பனை ஆனது. இது ஒன்றிய சுகாதாரத்துறையை வியப்பில் ஆழ்த்தியது.
 
அரசின்  விதிகளுக்கு புறம்பாக அதிகபட்சமாக பல கோடி மாத்திரைகள் தயாரித்ததாக மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், அந்த நிறுவனம் கொரோனா காலத்தில் மட்டும் ₹400 கோடிக்கு டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திற்கு  இந்தியாவில் சென்னை உட்பட 9 மாநிலங்களில் நிறுவனங்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இதுதவிர இந்த நிறுவனம் உலக முழுவதும் 50 நாடுகளில் கிளைகள் வைத்துள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரை தொடர்ந்து பெங்களூரு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, கோவா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 36 இடங்களில் கடந்த 6 மற்றும் 7ம் தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்க பணம், தங்க நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். அதில் ஒன்றிய அரசுக்கு கொரோனா காலத்தில் டோலோ மத்திரைகள் விற்பனை செய்தது மூலம் ₹300 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. மேலும், உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து ₹1.20 கோடி ரொக்க பணம், ₹1.40 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தலைமை அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் மைக்ரோ லேப்ஸ் மருந்து நிறுவனம், தங்களது மருந்து நிறுவனத்தின் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள், மெடிக்கல் ஷார் மற்றும் மருந்து ஏஜென்சிகளுக்கு மட்டும் ₹1000 கோடியை பரிசு பொருட்களாக செலவு செய்து இருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Micro Labs , 350 Crore 'Dola 650' Pills Sale Issue Rs 1000 Crore Prize for Doctors to Prescribe Dolo to Patients; Micro Labs corporate sales scam exposed: Rs 300 crore tax evasion
× RELATED 350 கோடி ‘டோலா 650’ மாத்திரைகள் விற்பனை...